/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சீல் வைக்கப்பட்ட த.மா.கா., அலுவலகம் திறப்பு
/
சீல் வைக்கப்பட்ட த.மா.கா., அலுவலகம் திறப்பு
ADDED : டிச 10, 2024 06:09 AM

பழநி: பழநியில் பூட்டி சீல் வைக்கப்பட்ட த.மா.கா., அலுவலகம் நீதிமன்ற உத்தரவின் படி நேற்று திறக்கப்பட்டது.
பழநி த.மா.க., அலுவலகம் மூப்பனார் பவன் என்ற பெயரில் ஆர்.எப் ரோட்டில் செயல்பட்டு வந்தது. ஜூலை 23 அன்று கட்சியினர் சிலர் த.மா.கா.,விலிருந்து விலகி காங்.,ல் இணைந்தனர். அதன் பின் கட்சி அலுவலகத்தை கைப்பற்ற முயன்றனர்.
இதனால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தாசில்தார் த.மா.கா., அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தார். இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. அலுவலகத்தை சீல் வைத்ததை அகற்றவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று த.மா.கா., அலுவலகம் திறக்கப்பட்டது. முன்னாள் எம்.பி.,சித்தன் திறந்து வைத்து கொடி ஏற்றினார்.
த.மா.கா., அலுவலகத்தில் காந்தி, காமராஜர், மூப்பனார் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். த.மா.க., மாநில செயலாளர் மணிகண்ணன், மாவட்ட தலைவர் ராசிப்பன், நகர தலைவர் சண்முகநாதன், பா.ஜ.,மாவட்ட தலைவர் கனகராஜ், பா.ம.க., மாவட்ட செயலாளர் வைரமுத்து கலந்து கொண்டனர்.

