ADDED : மார் 16, 2024 07:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே காப்பிளியப்பட்டி கல்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
கல்வி குழுமத் தாளாளர் குமரவேல் முன்னிலையில் பள்ளி மாணவர்கள் துவக்கினர். பாரதி பப்ளிக் பள்ளி இணைச்செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், குப்புசாமி இளம் அறிவியல் விஞ்ஞானிகள், ஊக்குவித்த ஆசிரியர்களுக்கும் விருது வழங்கி பாராட்டினர்.
மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி நடந்து செல்வதற்கு நவீன தொழில்நுட்ப கைத்தடி , சூரிய ஒளியின் மூலம் மின் உற்பத்தி செய்தல், மண்ணில்லா விவசாயம் உட்பட 70க்கு மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. முதல்வர் செந்தில், மாணவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

