/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாநகராட்சி மீது எஸ்.பி.,யிடம் துாய்மை பணியாளர்கள் புகார்
/
மாநகராட்சி மீது எஸ்.பி.,யிடம் துாய்மை பணியாளர்கள் புகார்
மாநகராட்சி மீது எஸ்.பி.,யிடம் துாய்மை பணியாளர்கள் புகார்
மாநகராட்சி மீது எஸ்.பி.,யிடம் துாய்மை பணியாளர்கள் புகார்
ADDED : செப் 26, 2024 05:24 AM
திண்டுக்கல்: தமிழ்நாடு துாய்மை பணியாளர்கள் நலசங்க மாநில தலைவர் காளிராஜ் திண்டுக்கல் எஸ்.பி.,பிரதீப்பிடம் கொடுத்த மனுவில், திண்டுக்கல் மாநகராட்சியில் தனியார் நிறுவனத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்கள் 300க்கு மேலானோர் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு ஊதிய உயர்வு,போனஸ் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டு நடவடிக்கை இல்லாததால் போராட்டம் நடத்தினோம். சிலர் தொழிலாளர்களை மிரட்டுகின்றனர்.
கலெக்டர் நிர்ணயம் செய்த ஊதியத்தை வழங்காமல் கொத்தடிமைகளை போல் குறைந்த ஊதியத்தை வழங்குவோருக்கு ஆதரவாக மாநகராட்சி நிர்வாகமும்,சில சங்கங்கள் பொய் புகார்களை கொடுத்து போராட்டத்தை சீர்குலைக்க பார்க்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகம்,சம்பந்தபட்ட தனியார் நிர்வாகமும் போரட்டத்தில் ஈடுபட்டுள்ள துாய்மை பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

