/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரிக்கெட் லீக் போட்டி ராயல் அணி வெற்றி
/
கிரிக்கெட் லீக் போட்டி ராயல் அணி வெற்றி
ADDED : டிச 24, 2025 06:10 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் கொடைக்கானல் டிவிஷன் லீக் போட்டியில் ராயல் அணி வெற்றி பெற்றது.
பவான்ஸ் கோப்பைக்கான போட்டிகள் பவான்ஸ் காந்தி வித்யாஸ்ரம் மைதானத்தில் நடந்தது.
கொடைக்கானல் ராயல் சிசி அணி 20 ஓவர்களில் 132/7.
பிரதீப் 50, அஜய்பிரசாத் 39 (நாட்அவுட்) ரன், சாலமன்ராஜா 3 விக்கெட். சேசிங் செய்த லயன் சிசி அணி 20 ஓவர்களில் 78/9 எடுத்து தோற்றது. நிகாஷ்பாபு 31 ரன், பிரதீப் 3 விக்கெட்.
ரைனோஸ் சிசி அணி 20 ஓவர்களில் 181/3. ராஜா 84 (நாட்அவுட்), மணிகண்டன் 38, மனோஜ்குமார் 35 ரன். சேசிங் செய்த ஸ்பார்க்கர்ஸ் சிசி அணி 20 ஓவர்களில் 110/6 எடுத்து தோற்றது.
முகமது அசாருதீன் 41 (நாட்அவுட்) ரன், விக்னேஷ் கண்ணன் 3 விக்கெட். யங்ஸ்டர்ஸ் ஜூனியர்ஸ் சிசி அணி 15 ஓவர்களில் 164/3. வினோத்குமார் 70 (நாட்அவுட்), அருண்குமார் 35 ரன்.
சேசிங் செய்த ஸ்பார்க்கர்ஸ் சிசி அணி 15 ஓவர்களில் 63/7 எடுத்து தோற்றது.
லயன் சிசி அணி 15 ஓவர்களில் 76/4. சேசிங் செய்த கிரவுண்ட் சிசி அணி 12.2 ஓவர்களில் 77/5 எடுத்து வென்றது.
விமல் 32 ரன். லேக் பிரண்ட்ஸ் சிசி அணி 20 ஓவர்களில் 134/5. சண்முகம்ஜோன்ஸ் 60 ரன்.
சேசிங் செய்த யங்ஸ்டர்ஸ் சிசி அணி 15 ஓவர்களில் 137/4 எடுத்து வென்றது. அருண்குமார் 42, ரமேஷ் 30 (நாட்அவுட்).
முதலில் பேட்டிங் செய்த பிளாக்மாம்பாஸ் சிசி அணி 20 ஓவர்களில் 133/6.
முரளிதரன் 35 ரன். சேசிங் செய்த பெஸ்ட் வெலன் அணி 18 ஓவர்களில் 98 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. பாண்டி, நாகர்ஜூன் தலா 3 விக்கெட்.

