/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' யில் ஜீப்பை அகற்றி ரோடு அமைப்பு
/
'கொடை' யில் ஜீப்பை அகற்றி ரோடு அமைப்பு
ADDED : ஆக 15, 2025 02:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: தினமலர் செய்தி எதிரொலியாக கொடைக்கானல் நகராட்சியில் காலாவதியான ஜீப் நிற்கும் பகுதியில் ரோடு அமைக்கப்பட்டது.
கொடைக்கானல் நகராட்சியில் சேதமடைந்த ரோடுகள் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. சில தினங்களுக்கு முன் கொடைக்கானல் செவன் ரோடு கவி தியாகராஜர் ரோடு வரை ரோடு அமைக்கும் பணியின் போது அரசு மருத்துவமனை முன் காலாவதியான ஜீப் நிறுத்தப்பட்ட நிலையில் வாகனத்தை அகற்றாமல் ரோடு அமைக்கப்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் நேற்று ஜீப்பை அகற்றி ரோடு அமைத்தனர்.

