/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாசிலாமணிபுரத்தில் தொடரும் மின் தடை; மாணவர்கள் அவதி
/
மாசிலாமணிபுரத்தில் தொடரும் மின் தடை; மாணவர்கள் அவதி
மாசிலாமணிபுரத்தில் தொடரும் மின் தடை; மாணவர்கள் அவதி
மாசிலாமணிபுரத்தில் தொடரும் மின் தடை; மாணவர்கள் அவதி
ADDED : மார் 10, 2024 08:10 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி மாசிலாமணிபுரத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து நிலவுவதால் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் செய்வதறியாமல் உள்ளனர்.
இந்த பகுதியில் காலை முதல் அறிவிக்க படாத மின்வெட்டு பலமுறை தொடர்ந்ததால் வீடுகளில் தண்ணீருக்காக மோட்டாரை இயக்குவது ,மாணவர்களின் மதிய உணவு ஏற்பாட்டிற்கான சமையல் பணியில் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் மாணவர்களுக்கான மதிய உணவை பெற்றோர்கள் தாமதமாக பள்ளிக்கு சென்று கொடுக்கும் நிலை ஏற்பட்டது.
தேர்வு நேரங்களில் இதுமாதிரியான அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவும்போது மாணவர்களின் கவனம் சிதறும் வாய்ப்பு உள்ளது. மாசிலாமணிபுரத்தில் அடிக்கடி நிகழும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் துாக்கம் கலைந்த நிலையில் மாணவர்களின் மனநிலை பாதிக்கும் சூழல் ஏற்படுவதாக குடும்ப தலைவிகள் வேதனை தெரிவித்தனர்.
உதவி செயற்பொறியாளர் சரவணன், ''திருச்சி ரோட்டில் உள்ள கே.ஆர்.நகரில் சில தனியார் நிறுவன கட்டுமான பணிகளில் ஏற்பட்ட சிறு இடையூறு காரணமாக மின்வழி பாதையின் ஒயர் லைன்களில் சிறிய மாற்றம் செய்யப்பட்டதால் மின்தடை நிலவியது. பணிகள் முழுமையடைந்த நிலையில் இனி மின்வெட்டு இருக்காது என்றார். -

