ADDED : டிச 13, 2025 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: அனைத்து சாதியினருக்கும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கோரியும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள்படி வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியும் பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ் அணி) வன்னியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் முன்பாக நடந்த இதற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் பரசுராமன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் ஜோதிமுத்து வரவேற்றார். தெற்கு செயலாளர் நாகேந்திரன், கிழக்கு மாவட்ட தலைவர் ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சீரங்கன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் மாராமகிருஷ்ணன், ஆரோக்கியதாஸ், பார்வதிராஜா, நாகரத்தினம், நிர்மலா ஞானசவுந்தரி, மகேஸ்வரி, சோழராஜ், முத்துராஜ் கலந்து கொண்டனர்.

