/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டாக்டருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
/
டாக்டருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : செப் 26, 2024 05:27 AM
திண்டுக்கல் டாக்டரால் ஆன்லைனில் ஆர்டர் செய்த காருக்கான உதிரிபாகங்களுக்கான பணத்தை பெற்றுகொண்டு பொருட்களை அனுப்பாத ஹரியானா தனியார் நிறுவனம் வட்டியுடன் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
திண்டுக்கல் கிழக்குகோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் டாக்டர் ரூபன்குமார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றுகிறார். 2023 ஜனவரியில் தனது காருக்கு தேவையான உதிரிபாகங்களை ஆன்லைனில் ஹரியானாவை சேர்ந்த சர்வீஸ் ஈசி டெக்னாலஜி பிரைவேட் லிமிட் எனும் நிறுவனத்தில் ஆர்டர் செய்தார். அதற்காக ரூ.8797 பணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தினார். கார் உதிரிபாகங்கள் வரவில்லை. அதற்குரிய பணமும் திரும்பி வரவில்லை. நிறுவனத்தை தொடர்புகொண்டு பேசிய போதிலும் முறையான பதில் கிடைக்கவில்லை. டாக்டர் ரூபன்குமார்,திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் வழக்கறிஞராக செல்வம் ஆஜரானார். விசாரித்த தலைவர் சித்ரா ரூ.8797 உடன் 9 சதவீதம் வட்டி சேர்த்து வழங்க வேண்டும். நஷ்ட ஈடாக ரூ.10 ஆயிரம் ,செலவு தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என ஹரியானா சர்வீஸ் ஈசி டெக்னாலஜி பிரைவேட் லிமிட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

