ADDED : செப் 07, 2025 03:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை: பிள்ளையார்நத்தம் அரசு நடுநிலை பள்ளியில் ஊட்டச்சத்து வர விழா நடந்தது. தலைவி லீடு பவுண்டேஷன் தலைவர் சார்மிளா தலைமை வகித்தார்.
செயலாளர் மாலா பிரபு முன்னிலை வகித்தார். சிறுநாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஹரி பாலாஜி , ஊட்டச்சத்து நிபுணர் கவிதா செல்வகுமார் ,நிலக்கோட்டை முத்து மருத்துவமனை டாக்டர் ஆர்த்தி பேசினர். பங்கேற்றவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பயிர் வகைகள் வழங்கப்பட்டது. மாவட்ட மனித வள கூட்டமைப்பு தலைவர் பிரபு, துணைத் தலைவர் செந்தில்குமார் ஒருங்கிணைத்தனர். ஊராட்சி முன்னாள் உறுப்பினர் ரூபா முத்துமாரி நன்றி கூறினார்.