ADDED : டிச 20, 2025 06:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் எம்.ஆர்.பி., தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம், சம விலைக்கு சம ஊதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதற்கு ஆதரவு தெரிவித்து திண்டுக்கல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பழநி வட்டாரத் தலைவர் கலா தலைமை வகித்தார். கன்னிவாடி வட்டார நிர்வாகி நித்தியா, பழநி வட்டார பொருளாளர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி பேசினார்.

