/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மோடி மீண்டும் பிரதமர் ஆவார் 'இண்டியா' கூட்டணி சிதறும் சுந்தரவடிவேல் சுவாமி ஆருடம்

ADDED : மார் 13, 2024 01:24 AM

கொடைக்கானல்:''ஆன்மிகத்தை இழிவுபடுத்துபவர்கள் பாதிக்க வேண்டும். மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவார். லோக்சபா தேர்தலுக்கு முன்னரே 'இண்டியா' கூட்டணி சிதறிவிடும்'' என தேனிமாவட்டம்கூடலூர் மகா சக்தி அறக்கட்டளை மடாதிபதி சுந்தரவடிவேல் சுவாமி கொடைக்கானலில் பேசினார்.
மூன்றாவது முறையாக 2024ல் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்க கொடைக்கானல் அப்சர்வேட்டரி முனீஸ்வரன் கோயிலில் அஷ்வமேத யாகம் நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற சுந்தர வடிவேல் சுவாமி பேசுகையில் ''ராமாயணத்தில் ராமனுக்கு பட்டம் சூட்ட 1500 அடி உயரத்தில் அஷ்வமேத யாகம் நடத்தப்பட்டது.
மோடி பிரதமர் ஆக 2008லும் இந்த யாகம் நடத்தப்பட்டது.தற்போது கொடைக்கானலில் 5200 அடி உயரத்தில் அஷ்வமேத யாகம் நடந்தது.
இதனால் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராகபதவி ஏற்பது உறுதி. அதே நேரத்தில் லோக்சபா தேர்தலுக்கு முன்னரே 'இண்டியா' கூட்டணி சிதறிவிடும் .
மேலும் ஆன்மிகத்தை இழிவுபடுத்துபவர்கள் பாதிக்கப்பட வேண்டும் '' என்றார்.