/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி தனி மாவட்டமாவது; எப்போது முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் சொல்கிறார் எம்.எல்.ஏ., செந்தில்குமார்

ADDED : ஏப் 06, 2025 06:22 AM
திண்டுக்கல் : ''திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநியை தனி மாவட்டமாக பிரிப்பது குறித்து நிதி நிலையை ஆராய்ந்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்,'' என, பழநி தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி., தொகுதிகளை மறுவரையறை செய்வதில் மத்திய அரசிடம் உள்நோக்கம் உள்ளது. இதற்கான போராட்டத்தில் அனைவரும் கட்சி பாகுபாடு பாராமல் ஒன்றிணைய வேண்டும்.
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை நீட் தேர்வு வரவில்லை. முதல்வராக பழனிசாமி பதவியேற்றதும் நீட் தேர்வு அமல், உதய் மின் திட்டத்திற்கான கையெழுத்து உட்பட மாநிலத்தின் அதிகாரங்களை மத்திய அரசிடம் கொடுத்து விட்டார். கச்சத்தீவு முதல்வராக இருந்த கருணாநிதியின் எதிர்ப்பை மீறி மத்திய அரசால் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. இந்த தீவு மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமானது அல்ல.
வருவாய்த்துறையின் குறிப்பில் ராமநாதபுரம் ராஜா சேதுபதிக்கு சொந்தமான 700 ஏக்கர் பரப்பு கொண்டதாக கச்சத்தீவு என உள்ளது. இப்படி தனி நபருக்கு சொந்தமான நிலத்தை ஒப்பந்தம் மூலமாக இலங்கைக்கு கொடுத்தனர்.
வக்ப் சட்ட திருத்த மசோதாவில் 44 திருத்தங்கள் மட்டுமே இருப்பதாக மத்திய அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் 115 திருத்தங்களையும், புதியவற்றையும் சேர்த்துள்ளனர். இதற்கான ஆதாரங்களை வெளியிடவும் தயாராக உள்ளோம் என்றார்.