/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அறிவிப்பில்லா மின்தடைஇருள் சூழ்ந்த மாசிலாமணிபுரம்
/
அறிவிப்பில்லா மின்தடைஇருள் சூழ்ந்த மாசிலாமணிபுரம்
ADDED : அக் 11, 2024 07:22 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாசிலாமணிபுரம் சுற்றுப்பகுதிகளில் முன்னறிவிப்பில்லா மின் தடையால் மக்கள் இரவு 9:00 மணிக்கு மேலாக சப்ளை வராததால் அவதி அடைந்தனர்.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் அருகே உள்ளது மாசிலாமணிபுரம்.இதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று மதியம் 3:15 மணி முதல் முன்னறிவிப்பு இல்லாமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் அப்பகுதியை சுற்றிய மக்கள் என்.ஜி.ஓ., காலனி மின் அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டும் அவர்கள் முறையான பதில் அளிக்க வில்லை .
இதனால் பெண்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள், குழந்தைகள் உட்பட அனைத்து மக்களும் மின்சாரம் இல்லாமல் அவதி அடைந்தனர்.
இரவு 9:00 மணிக்கு பின்னரும் மின்சாரம் வராததால் மாசிலாமணிபுரம் பகுதி முழுவதும் இருள் சூழ்ந்தது. மக்கள் வீட்டிற்குள் இருக்க முடியாமல்,கொசுக்கடியும் தாங்க முடியாமல் தவித்தனர்.
ஒரு சிலர் தங்கள் வீடுகளில் அவசர தேவைக்காக இன்வெர்ட்டர் வைத்திருந்தனர்.
நீண்ட நேரமாக மின்சாரம் வராததால் அதிலும் சார்ஜ் இல்லாமல் போனது. தொடர் அவதியை சந்தித்த மக்கள் மின்வாரிய அதிகாரிகளை வசை பாடத் துவங்கினர்.
என்.ஜி.ஓ., காலனி, உதவி மின் பொறியாளர்,சரவணன் கூறியதாவது, மாசிலாமணிபுரம் அருகே உள்ள மின் கம்பத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டு மாசிலாமணிபுரம் முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது.
அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்படும் என்றார்.

