/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெண்ணுடன் வாழ மறுத்தவருக்கு சிறை
/
பெண்ணுடன் வாழ மறுத்தவருக்கு சிறை
ADDED : டிச 25, 2024 08:00 AM
திண்டுக்கல் : செங்குறிச்சி மாமரத்துப்பட்டியில் பெண்ணுடன் பழகி குழந்தை பெற காரணமாகயிருந்த ஆட்டோ டிரைவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
செங்குறிச்சி மாமரத்துப்பட்டி சேர்ந்த ஆட்டோ டிரைவர் தர்மராஜ் 36. இவருக்கு திருமணம் ஆகி குடும்பம் உள்ளது. 2020ல் அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவுக்கார 34,வயது பெண்ணுடன் பழகினார். குழந்தை பிறக்கும் போது நான் பொறுப்பல்ல என்றார். போலீசார் தர்மராஜை கைது செய்தனர். அப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஜாமினில் வந்த தர்மராஜ் தவறை ஒப்புக்கொண்டு அப்பெண்ணுடன் வாழ்ந்தார். நீதிபதி சரண் ஓராண்டு சிறை தண்டனை,ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வழக்கறிஞராக ஜோதி ஆஜராகினார்.

