/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அனுமதியின்றி வாட்ஸ் ஆப் குரூப்களில் இணைப்பு ; இதன் போக்கை தடுக்க தேவையாகுது நடவடிக்கை
/
அனுமதியின்றி வாட்ஸ் ஆப் குரூப்களில் இணைப்பு ; இதன் போக்கை தடுக்க தேவையாகுது நடவடிக்கை
அனுமதியின்றி வாட்ஸ் ஆப் குரூப்களில் இணைப்பு ; இதன் போக்கை தடுக்க தேவையாகுது நடவடிக்கை
அனுமதியின்றி வாட்ஸ் ஆப் குரூப்களில் இணைப்பு ; இதன் போக்கை தடுக்க தேவையாகுது நடவடிக்கை
ADDED : மார் 30, 2024 04:12 AM

மாவட்டத்தின் பல இடங்களில் பெயர், முகவரி பதிவு செய்யும் நிலை ஏற்படும்போது அலைபேசி நம்பர்களை கொடுக்கும் பழக்கம் தவிர்க்க முடியாததாகி உள்ளது.
இவ்வாறு கொடுக்கப்படும் நம்பர்களை சம்மந்தமில்லாத வாட்ஸ்ஆப் குரூப்களில் இணைத்து தேவையில்லாத குறுந்தகவல்கள் அதிகம் பரப்புவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு அதிகரித்துள்ளது. இவ்வாறு முன் அனுமதியின்றி சேர்க்கப்படும் பல அலைபேசி நம்பர்களின் உரிமையாளர்கள் அந்த வாட்ஸ்ஆப் குரூப்பிலிருந்து வெளியேறும் முறை தெரியாமல் திண்டாடும் நிலையும் தொடர்கிறது.
இவ்வாறு இணைக்கப்படும் பல வாட்ஸ்ஆப் குரூப்கள் வணிக ரீதியான வியாபார நோக்கிலும், பணத்தாசையை துாண்டி விட்டு ஏமாற்றும் போக்கில் சுயதொழில்களை மையப்படுத்தியும் வருவதால் பண இழப்பு அபாயமும் பலருக்கு ஏற்பட்டு வருகிறது.
இதன் பின் அடுத்தடுத்து அந்த வாட்ஸ்ஆப் குரூப்களின் மூலமாக பிற 'லிங்க்' கை தொட செய்வதன் மூலமாக மேலும் பல வாட்ஸ்ஆப் குரூப்களில் இணைத்து விடும் போக்கும் தொடர்கிறது.
இப்படியாக வாட்ஸ் ஆப் குரூப்களில் சிக்கி வெளியேற முடியாதபடி தவிக்கும் பலரின் அலைபேசிகளில் தேவையற்ற
குறுந்தகவல், வீடியோக்கள், படங்கள் வந்து அதிகமாக விழுவதால் அலைபேசி இயக்கத்தடையாகி நாளடைவில் பழுது ஏற்படுவதாகவும் புகார்கள் குவிகின்றன.
மேலும் இதிலிருந்து வெளியேறாத பட்சத்தில் வங்கி முதல் சேமிப்பு நிறுவனங்கள் அனைத்திலும் பதிவு செய்துள்ள நம் அலைபேசிகளில் குறுந்தகவல்கள் அனுப்பி ஓ.டி.பி., எண்களை நம்மிடமே பெற்று ஏமாற்றி விடுவர்.
இதன் பின் அந்த ஓ.டி.பி., நம்பர்களை கொண்டே பல ஆண்டு சேமிப்பு பணத்தை அபகரிக்கும் சமூக விரோத கும்பல்களின் செயலும் அரங்கேறும். இதில் பொதுமக்களை விழிப்புடன் இருக்க செய்ய சட்ட ரீதியான எச்சரிக்கையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

