ADDED : நவ 24, 2024 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான பங்கேற்று நடித்தல் போட்டி ஒட்டன்சத்திரம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடந்தது.
முதல் பரிசு குஜிலியம்பாறை,ரா.புதுக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி ,2ம் பரிசு பழநி ஆயக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி,3ம் பரிசு நி.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றது.
மாவட்ட ஆசிரியர் கல்வி,பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் மாணவர்களை பாராட்டினார்.
முதுநிலை விரிவுரையாளர்கள் கிருஷ்ணமூர்த்தி,நிர்மலா தேவி,விரிவுரையாளர்கள் பூபதி,தாவீது போட்டியை நடத்தினர். முதல் பரிசு பெற்றவர்கள் மாநில அளவில் திருச்சியில் நடக்கும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

