ADDED : நவ 27, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துாரில் படித்த இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு , வேலை வாய்ப்பு பயிற்சி மையம் துவக்க விழா நடந்தது.
தமிழக அரசு படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் வேலை வாய்ப்பைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான திறமையை ஊக்குவிக்கும் வகையில் திறன் வளர்ப்பு , வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தை வெற்றி நிச்சயம் என்ற நோக்கத்தோடு நான் முதல்வன் திட்டத்தை சென்னையில் துவக்கி வைத்தது.
இந்த திட்டம் சென்னையைத் தொடர்ந்து நேற்று வேடசந்துர் ஒன்றிய அலுவலக கட்டடத்தில் துவக்கப்பட்டது.
கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். கரூர் காங்., எம்.பி., ஜோதிமணி, மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., நிர்வாகிகள் வீரா.சாமிநாதன், கவிதா, கார்த்திகேயன், ரவிசங்கர், காங்., நிர்வாகிகள் சாமிநாதன், சதீஷ் பங்கேற்றனர்.

