ADDED : மார் 21, 2024 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு லாட்ஜ்,விடுதி,மண்டப உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விடுதி, மண்டபம், லாட்ஜ்களில் தங்குவோர் குறித்த விவரங்களை பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். தங்கும் நபர்களின் அடையாள அட்டைகளை சரிபார்த்து நகல்களை பெற வேண்டும். அயல்நாட்டவர்களின் பாஸ்போர்ட், விசா குறித்து பரிசோதித்து அவர்களை அனுமதிக்க வேண்டும். சந்தேகப்படும் நபர்கள் தங்கினால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். எஸ்.ஐ., விஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர்

