ADDED : அக் 24, 2024 07:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர் பேரவை பதவி ஏற்பு விழா நடந்தது. பள்ளிச் செயலர் பட்டாபிராமன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சுற்றுச்சூழல் மேம்பாட்டு மன்றம்,பொது அறிவுத்துறை மன்றம், உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மேம்பாட்டு மன்றம், கலாசாரம் மேம்பாட்டு மன்றம், கலைத்துறை மன்ற மாணவர் தலைவர்கள் உறுதிமொழி ஏற்று தங்களின் அடையாள சின்னத்தை வெளியிட்டனர். மாணவர்கள் அக் ஷயன் கீதம் பாடி மன்ற உறுதிமொழி ஏற்றனர். பள்ளி முதல்வர் சவும்யா பேசினார்.

