ADDED : மார் 16, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டிவீரன்பட்டி : அய்யம்பாளையத்தில் மாற்றுத்திறனாளி மனைவியுடன் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி காந்தி 50. இவரது மனைவி அமுதா 45. அய்யம்பாளையத்தில் தோட்டத்தில் மகள் சசிகலாவுடன் கூலி வேலை செய்து வருகின்றனர். மகள் சசிகலா வேலைக்கு சென்ற நிலையில் கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்துள்ளனர். காந்தி தனது மூன்று சக்கர வாகனத்தில் மனைவியை அழைத்துக்கொண்டு அய்யம்பாளையம் பாலத்தில் சென்ற போது மயங்கி விழுந்தார்.
108 ஆம்புலன்சில் கொண்டு செல்லும் வழியில் இருவரும் இறந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

