/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உயரமான சாக்கடை; வீடுகளுக்குள் புகும் மழை நீர் சுகாதார சீர்கேட்டில் பழநி 12 வது வார்டு மக்கள்
/
உயரமான சாக்கடை; வீடுகளுக்குள் புகும் மழை நீர் சுகாதார சீர்கேட்டில் பழநி 12 வது வார்டு மக்கள்
உயரமான சாக்கடை; வீடுகளுக்குள் புகும் மழை நீர் சுகாதார சீர்கேட்டில் பழநி 12 வது வார்டு மக்கள்
உயரமான சாக்கடை; வீடுகளுக்குள் புகும் மழை நீர் சுகாதார சீர்கேட்டில் பழநி 12 வது வார்டு மக்கள்
ADDED : நவ 15, 2025 05:39 AM

பழநி: உயரமான சாக்கடை, வீடுகளுக்குள் வரும் மழை நீர் என்பன போன்ற பிரச்னைகளால் பழநி நகராட்சி 12 வது வார்டு மக்கள் பாதிக்கின்றனர்.
ராஜாஜி ரோடு, ஒன்று முதல் ஐந்து வரையிலான குறுக்கு தெருக்களை உள்ளடக்கிய இந்த வார்டில் பழநி நகரை இணைக்கும் முக்கிய சாலை பழைய தாராபுரம் சாலையுடன் இணைகிறது.
சாலைகளில் இறைச்சி கடைகள் அதிகம் உள்ளதால் கழிவுகள் அதிகம் சேர்கின்றன. இவற்றை சாக்கடையில் கொட்டுவதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி ரோட்டில் ஓட சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
விபத்தில் சிக்கும் ஓட்டிகள் மாசானம், விவசாயி, ராஜாஜி ரோடு: பழைய தாராபுரம் சாலை, இரண்டாவது ராஜாஜி குறுக்கு தெரு சந்திக்கும் இடத்தில் இரவு நேரங்களில் வாகனங்களில் வரும் நபர்கள் விபத்தில் சிக்குகின்றனர். இங்கு உயர் மட்ட மின் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாய் தொல்லை அதிக அளவில் உள்ளது. சாக்கடைகளை முறையாக தூர்வார வேண்டும்.
தொற்றுக்கு வழி தரும் நாய்கள் காளிமுத்து, எலக்ட்ரீசியன்: நாய் தொல்லை அதிகளவில் உள்ளது. நோயுடன் சுற்றி திரிவதால் நோய் தொற்று அபாயம் ஏற்படுகிறது. இதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெடுஞ்சாலைகளில் சாக்கடை கால்வாய் உயரமாக உள்ளது. குறுக்கு சந்தில் உள்ள சாக்கடைகளை விட உயரமாக தடுப்பு இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் வீட்டுக்குள் செல்லும் நிலை உள்ளது. கால்நடைகள் ரோட்டில் திரிவதை தடுக்க வேண்டும்.
நாய்கள் கட்டுப்படுத்தப்படும் முருகேசன், கவுன்சிலர் (வி.சி.க.,) : ரேஷன் கடைகள் முறையாக இயங்குகிறது. சாக்கடைகளில் வரும் மழை நீர் வீடுகளுக்குள் போகாமல் தடுக்க நெடுஞ்சாலை துறை சார்பில் சாக்கடைகளை சரி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாய் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். சாக்கடைகள் துார்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணியாட்கள் பற்றாக்குறையும் சமாளித்து துார்வாரப்படுகிறது என்றார்.

