/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடிக்கம்பம் அகற்றம் காங்., வாக்குவாதம்
/
கொடிக்கம்பம் அகற்றம் காங்., வாக்குவாதம்
ADDED : மார் 21, 2024 02:56 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கட்சிக்கொடிகம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் காங்.,கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் உதவியோடு கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல் அதிகாரிகள் உத்தரவில் திண்டுக்கல் நகரில் உள்ள கட்சிக்கொடி கம்பங்கள்,சுவர் விளம்பரங்கள்,பேனர்கள் போன்றவற்றை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். நேற்று ஆர்.எம்.காலனி,பழநிரோடு,சந்தைபேட்டை,திருச்சி ரோடு,பேகம்பூர்,நாகல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த கட்சிக்கொடி கம்பங்களை நகரமைப்பு திட்ட அலுவலர் ஜெயக்குமார்,உதவி செயற்பொறியாளர் சுவாமிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் அகற்றினர். நாயக்கர் புதுத்தெரு பகுதி காங்., கொடிகம்பங்களை அகற்ற முயன்ற போது காங்.,நிர்வாகிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு வார்த்தை நடத்த கொடிகம்பங்களை அகற்றினர்.

