/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முருங்கை கிலோ ரூ.8 விரக்தியில் விவசாயிகள்
/
முருங்கை கிலோ ரூ.8 விரக்தியில் விவசாயிகள்
ADDED : ஆக 05, 2025 04:51 AM

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு சனி வார விடுமுறை. நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கை முன்னிட்டு விடுமுறை. இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்பு நேற்று மார்க்கெட் செயல்பட தொடங்கியது. இதனால் காய்கறிகளின் வரத்து வழக்கத்துக்கு மாறாக அதிகரித்தது. குறிப்பாக முருங்கைக்காய் வரத்து இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்தது. தங்கச்சி அம்மாபட்டி காந்தி மார்க்கெட்டில் எங்கு பார்த்தாலும் முருங்கைக்காய் மூடைகளே அதிகமாக இருந்தன.
வரத்து அதிகரித்திருந்த நிலையிலும் வியாபாரிகள் வழக்கமான அளவிற்கே கொள்முதல் செய்ததால் முருங்கைக்காய் விலை படுவீழ்ச்சி அடைந்தது. ஒரு வாரத்திற்கு முன் கிலோ ரூ.15 க்கு விற்ற முருங்கைக்காய் நேற்று கிலோ ரூ.8 க்கு மட்டுமே விற்பனையானது. இந்த விலையானது முருங்கைக்காயை செடிகளில் இருந்து பறித்தெடுக்கும் கூலிக்கு கூட கட்டுபடியாகது என்பதால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
கமிஷன் கடை உரிமையாளர் எல்.கே.எஸ். அப்பன் கூறுகையில் ,'' இந்த விலையானது இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் நீடிக்கும்'' என்றார்.