ADDED : அக் 28, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம், : ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் இங்கு உள்ள சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இவற்றை கேரள வியாபாரிகள் அதிகம் வாங்கி செல்கின்றனர்.
கடந்த வாரம் கிலோ ரூ.60 க்கு விற்ற கரும்பு முருங்கை ரூ.35 க்கும், ரூ.45 க்கு விற்ற செடி முருங்கை ரூ. 25 க்கும், ரூ.35க்கு விற்ற மரம் முருங்கை ரூ.15 க்கும் விற்றது.
இதேபோல் கிலோ ரூ. 35க்கு விற்ற வெண்டை ரூ.27 க்கும், ரூ.9 விற்ற பீட்ரூட் ரூ.7 க்கும் குறைவாக விற்பனை ஆனது.
இதே போல் பல காய்கறிகளின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.

