sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் கல்வி உதவித்தொகை

/

 தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் கல்வி உதவித்தொகை

 தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் கல்வி உதவித்தொகை

 தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் கல்வி உதவித்தொகை


ADDED : நவ 26, 2025 04:35 AM

Google News

ADDED : நவ 26, 2025 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: தொழில் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கான தொழிலாளர் நலநிதியினை வாரியத்திற்கு 2 மாதத்திற்குள் செலுத்த வேண்டுமெனவும், அதன்மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என தொழிலாளர் நலத்துறையினர் தெரிவித்தனர்.

தொழிலாளர் உதவி ஆணையர் மலர்கொடி கூறியதாவது : தொழிலாளர் நலநிதி சட்டத்தின்படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு ,தோட்டம் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பங்கு தொழிலாளர் பங்கு ரூ.20, நிறுவனத்தின் பங்காக ரூ.40 என ஒவ்வாரு தொழிலாளிக்கும் ரூ.60 கணக்கிட்டு தொழிலாளர் நலநிதி வாரியத்திற்கு செலுத்த வேண்டும். அதன்படி நடப்பாண்டிற்கான நிதியினை 2026 ஜன 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

தொழிலாளர் நலநிதி செலுத்தும் தொழிலாளர்கள் ,அவர்களை சார்ந்தோருக்கு வாரியத்தின் மூலம் கல்வி உதவித்தொகை, (மழலையர் பள்ளி முதல் மேற்படிப்பு வரை) திருமணம், இறப்பு, ஈமசடங்கு, விபத்து மரணம் முதல் உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வு உதவித்தொகை வரை பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்படுகிறது. உதவித் தொகை பெற தொழிலாளரகளின் மாத ஊதியம் ரூ.35 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.

நேரிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செயலர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை - -600 006 என்ற முகவரிக்கு 2025 டிச. 31க்குள் அனுப்ப வேண்டும்.






      Dinamalar
      Follow us