/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டை மறித்து தி.மு.க., கூட்டம் மேடை; கண்டுக்காத அதிகாரிகள்
/
ரோட்டை மறித்து தி.மு.க., கூட்டம் மேடை; கண்டுக்காத அதிகாரிகள்
ரோட்டை மறித்து தி.மு.க., கூட்டம் மேடை; கண்டுக்காத அதிகாரிகள்
ரோட்டை மறித்து தி.மு.க., கூட்டம் மேடை; கண்டுக்காத அதிகாரிகள்
ADDED : ஏப் 06, 2025 05:31 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் - திருச்சி ரோட்டில் உழவர் சந்தை அருகே இரவில் நடந்த கூட்டத்தற்கு காலை முதலே ரோட்டை மறித்து தி.மு.க., பொதுக்கூட்டம் மேடை அமைக்கப்பட்டதால் வாகன ஒட்டிகள் மட்டுமன்றி பொது மக்களும் மிகுந்த பாதிப்பை சந்தித்தனர். போக்குவரத்து நிறைந்த இப்பகுதியில் ரோட்டை மறித்து மேடை அமைக்க அனுமதி வழங்கிய அதிகாரிகள்,கட்சியினரால் அரசு மீது மக்களும் அதிருப்தியடைந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் ரோடு முக்கிய ரோடாகும் .எந்நேரமும் போக்குவரத்து நிறைந்திருக்கும். இங்குள்ள உழவர் சந்தைக்கு மக்கள் அதிகளவில் டூவீலர்களில் வந்து செல்வர் . இதன் அருகே ரோட்டை மறித்து தி.மு.க., வினர் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக மேடை அமைத்தனர்.
ரோட்டின் இருபுறமும் முறையாக வாகனங்கள் செல்ல முடியாதப்படி தடுப்புகள்,வரவேற்பு வளைவுகளும் அமைத்திருந்தனர். இது போல் ரோட்டோரம் கம்பி கொண்டு ஆங்காங்கு கொடிகளையும் கட்டியிருந்தனர். இதனால் எதிர்திசையில் வாகனங்கள் ஒன்றுக்கொன்று நேர் எதிரே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஆம்புலன்ஸ், வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின . போக்குவரத்தை சரிசெய்ய வேண்டிய போலீசாரும் இதை கண்டுக்க வில்லை .இதுபோல் துறை அதிகாரிகளும் கண்டும் காணாமல் ஓதுங்கி கொண்டனர்.
இந்நிலை இரவு வரை நீடித்தது. இதன் மூலம் மக்கள் மத்தியில் அரசிற்கு கட்சியினரே அவப்பெயரை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். உழவர் சந்தை வந்த பெண்களும் தங்களுக்குள் கட்சியினரை வசைப்பாடி சென்றனர். கட்சிக்கு கெட்ட பெயரை வாங்கி கொடுக்கும் கட்சி நிர்வாகிகள் மீது மாவட்ட தி.மு.க., தலைமை நடவடிக்கை எடுக்க ேவண்டும். இல்லையேல் மக்கள் மத்தியில் கட்சிக்கு கெட்ட பெயர் உருவாவதோடு வரும் தேர்தலில் மக்களின் ஓட்டுக்களை இழக்கவும் நேரிடும்.

