/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விலை சரிந்த டிஸ்கோ கத்தரிக்காய்
/
விலை சரிந்த டிஸ்கோ கத்தரிக்காய்
ADDED : டிச 23, 2025 07:30 AM
ஒட்டன்சத்திரம்: வரத்து அதிகரிப்பால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் டிஸ்கோ கத்தரி விலை சரிவடைந்து கிலோ ரூ.10 க்கு விற்பனையானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, பெரியகோட்டை வடகாடு, கண்ணனுார், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் , சுற்றி கிராம பகுதிகளில் டிஸ்கோ கத்தரி அதிகமாக பயிரிடப்படுகிறது
தற்போது பல இடங்களில் அறுவடை மும்முரமாக நடப்பதால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்து உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு அறுவடை குறைவாக இருந்ததால் கிலோ டிஸ்கோ கத்தரி ரூ.30 க்கு விற்றது. தற்போது மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ள நிலையில் விலை சரிவடைந்து கிலோ ரூ.10 க்கு விற்பனையானது. இந்த விலையானது கட்டுபடி ஆகாது என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வியாபாரி ஒருவர் கூறுகையில், மார்க்கெட்டுக்கு வரத்து அதிகம் உள்ளதால் விலை இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.

