/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் மாவட்டத்தில் சேதமான ரோடுகளை சீரமைக்கலாமே; விபத்துக்களில் சிக்கி தவிக்கும் மக்கள்

ADDED : டிச 16, 2024 06:37 AM

மாவட்டத்தில் போக்குவரத்து நிறைந்த தேசிய நெடுஞ்சாலைகள்,மாநில நெடுஞ்சாலைகள் பல உள்ளன. சில நாட்களாக பெய்யும் பருவ மழை காரணமாக ரோடுகள் பல இடங்களில் சேதமாகி மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இப்பள்ளங்களில் மழை நீர் நிரம்பி இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு சரியாக தெரிவதில்லை. இதன் காரணமாக கனரக வாகனங்கள் முதல் டூவீலர்கள் வரை தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
மெயின் ரோடுகளை இணைக்க பல இணைப்பு ரோடுகள் உள்ளன. இந்த ரோடுகள் போடப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் ரோடு இருக்கும் இடமே தெரியவில்லை. பல ரோடுகளில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வெளியே சிதறி கிடக்கிறது. ஒட்டன்சத்திரம் புதிய பைபாஸ் ரோட்டிலிருந்து காவேரியம்மாபட்டிக்குச் செல்லும் ரோட்டிலிருந்து திருப்பூர்,கோவை செல்லும் சர்வீஸ் ரோட்டில் பல இடங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இப்பகுதியில் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமும் ஏற்படுகிறது.
ரோடை சீரமைக்க பலமுறை வலியுறுத்தியும் இன்னும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதேபோல் லெக்கையன்கோட்டையிலிருந்து அரசு கிட்டங்கி வழியாக செம்பட்டி ரோட்டிற்கு செல்லும் இணைப்பு ரோடு மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.