/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கட்டுப்படுத்தலாமே; சமையல் காஸ் சிலிண்டர் விநியோகிக்க கூடுதல் கட்டணம் வசூல்; பில் தொகை மேல் கூடுதல் பணம் கேட்பதால் நுகர்வோர் பாதிப்பு

ADDED : ஏப் 26, 2025 03:58 AM

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடை , வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையில் சமையல் காஸ் சிலிண்டர்களை விற்பனை செய்கின்றன.
இந்நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப விலையில் மாற்றம் செய்கின்றன.
ஏப்.8 வரை வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் ரூ.845 க்கு விற்பனையானது. அதன் பின்பு ரூ.50 அதிகரித்து ரூ.8௯5க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒட்டன்சத்திரம் சுற்றிய கிராம பகுதிகளுக்கு திண்டுக்கல், ஒட்டன் சத்திரம் பகுதிகளில் இருந்து சமையல் காஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
வீடுகளுக்கு சென்று சிலிண்டரை கொடுப்பவர்கள் டோர் டெலிவரிக்கென ரூ. 50 அதிகமாக வசூலிக்கின்றனர். இதற்கு ரசீது கிடையாது.
இதனால் உபயோகிப்பாளர்களுக்கும் டோர் டெலிவரி செய்பவர்கள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. டிரான்ஸ்போர்ட் செலவு எனகூறி வசூல் செய்கின்றனர்.
இதன் மூலம் உரிய ரசீது இல்லாமல் பல ஆயிரம் ரூபாய் வாடிக்கையாளர்களிடம் பறிக்கப்படுகிறது.