/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆக்கிரமிப்பின் பிடியில் பஸ் ஸ்டாண்ட் நிழல் கூரை ; வெயிலுக்கு ஒதுங்க வழி இன்றி தவிக்கும் அவலம்

ADDED : மார் 16, 2024 07:19 AM

மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு சொந்தமான பஸ் ஸ்டாண்ட்கள் உள்ளன. உள்ளூர் பகுதி, வெளியூர் பகுதிகளுக்கு செல்வதற்கு ஏராளமானோர் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றனர்.
தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் வெப்பம் அதிகரித்து வருவதால் பகலில் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது.
இருந்த போதிலும் பல்வேறு அவசிய தேவைகளுக்காக வெளியூருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
தவிர்க்க முடியாத இந்த பயணங்களுக்காக பஸ்சில் செல்வதற்கு பஸ் ஸ்டாண்ட் சென்றால் அங்கு போதிய நிழல் கூரை இல்லை. இருந்தாலும் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. இதனால் வெயிலில் காய்ந்தபடி தங்களுக்கு உரிய பஸ்களை தேடிக் கண்டுபிடித்து பயணிக்க மிகவும் சிரமப்பட வேண்டி உள்ளது.
முதியோர், குழந்தைகளுடன் வெளியூருக்கு செல்வோர் அவதிப்படுகின்றனர். பஸ் வரும் வரை வெயிலில் குழந்தைகளுடன் நிற்கும் அவலம் தொடர்கிறது.
கோடை விடுமுறை வர உள்ள நிலையில் சுற்றுலா, ஆன்மிக தலங்களுக்கு குடும்பத்துடன் செல்ல தொடங்கி விடுவார். இந்தாண்டு கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே தொடர்ச்சியாக வெப்பநிலை அதிகரித்தபடி உள்ளது. பயணிகளின் சிரமத்தை போக்க நிழற்கூரை ஆக்கிரமிப்புகளை அகற்றி தேவையான இடங்களில் தற்காலிக நிழற் பந்தல் அமைக்க உள்ளாட்சி அமைப்புகள் முயற்சி செய்ய வேண்டும்.