/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அண்ணனை கொல்ல முயற்சிதம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை
/
அண்ணனை கொல்ல முயற்சிதம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை
ADDED : ஏப் 23, 2025 04:19 AM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தொழில் போட்டியில் அண்ணன் சமாதானபிரபுவை 39, கொலை செய்ய முயன்ற தம்பி சாம்சனுக்கு 35, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நத்தம் அருகே ஏ. வெள்ளோடு சேர்ந்தவர் சமாதானபிரபு. ஆழ்குழாய் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரின் தம்பி சாம்சனும் இதே தொழில் செய்தார்.இருவருக்குமான தொழில் போட்டி முன்விரோதமாக மாறியது. திண்டுக்கல் மதுரை ரோடு ஏ.வெள்ளோடு பிரிவு அருகே 2023 மே 29ல் இரவு 9:00 மணிக்கு சமாதானபிரபுவை சாம்சன் அரிவாளால்வெட்டி கொலை செய்ய முயன்றார்.
இந்த வழக்கு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி ஆர்., கனகராஜ் அண்ணனை கொல்ல முயன்ற சாம்சனுக்கு 10 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறை தண்டனை , ரூ. 9 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் கூடுதல் வழக்கறிஞர் குமரேசன் வாதாடினார்.

