/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புத்தக தின போட்டி மாணவர்களுக்கு பரிசு
/
புத்தக தின போட்டி மாணவர்களுக்கு பரிசு
ADDED : ஏப் 18, 2025 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லுாரி சுய உதவிப்பிரிவு தமிழ்த்துறை தமிழ் மன்றம் சார்பாக இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முத்துலட்சுமி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சரவணன் பரிசு வழங்கினார். தமிழ்த்துறை துறைத்தலைவர் கவிதா தலைமை வகித்தார்.
ஜி.டி.என். கல்விக் குழுமம் தலைவர் ரெத்தினம் முன்னிலை வகித்தார். இயக்குநர் துரை, கல்வி இயக்குநர் மார்க்கண்டேயன், சுய உதவிப்பிரிவின் துணை முதல்வர் நடராஜன் பேசினர். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் செண்பகா நன்றி கூறினார்.

