/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிரி வீதியில் கடைகளுக்கு முன் தடுப்பு
/
கிரி வீதியில் கடைகளுக்கு முன் தடுப்பு
ADDED : மார் 21, 2024 02:56 AM

பழநி: பழநி கிரிவீதியில் கடைகளுக்கு முன் தடுப்புகள் அமைத்த அதிகாரிகளுடன் கடைக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பழநி கிரிவீதியில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பட்டா நிலத்தில் கடை வைத்துள்ள கடைக்காரர்களின் இடத்திற்கு முன் 'பேரி கார்ட்' மூலம் தடுப்புகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அப்போது கடைக்காரர்கள் நடந்து செல்வதற்கு சிறு வழி கூட விடாமல் கடைகளில் முன் தடுப்பு அமைத்தால் சிரமம் ஏற்படும் என கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் வந்த போலீசார் பாதுகாப்புடன் கடைகளுக்கு முன் தடுப்பு அமைக்கப்பட்டது.

