/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அங்கன்வாடி ஊழியர்கள் மறியல்; ஆயிரம் பேர் கைது
/
அங்கன்வாடி ஊழியர்கள் மறியல்; ஆயிரம் பேர் கைது
ADDED : ஜன 07, 2026 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்,பணி ஓய்வு பெறும் போது ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் எம்.ஜி.ஆர்., சிலை அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தின் சார்பில் மறியல் நடந்தது.
மாவட்டத் தலைவர் செல்வதனபாக்கியம் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ரத்தினமாலா பேசினார். மறியலில் ஈடுபட்ட 1000 பேரை திண்டுக்கல் நகர் போலீசார் கைது செய்தனர்.

