ADDED : பிப் 07, 2024 06:57 AM

திண்டுக்கல் : மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை அங்கமான பயோடெக்னாலஜிபிரிவின் டி.பி.டி. எனும் இளம் அறிவியல் துறை மேம்பாட்டிற்கான ஸ்டார் அந்தஸ்து நிதி பெற திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரி தகுதி பெற்றுள்ளது.தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 30 கலை அறிவியல் கல்லுாரிகளில் மாவட்டத்தின் சார்பாக ஜி.டி.என்.கல்லுாரி மட்டுமே தேர்வானது. இதன் மூலம் 3 ஆண்டுகளில் அறிவியல் துறைக்கான மத்திய அரசின் வளர்ச்சி நிதியாக ரூ.82 லட்சம் பெறப்பட்டு மாணவர்களுக்கான கற்பித்தலில் புதிய சாதனை புரிந்துள்ளது.
இதன் மூலம் தேசிய தரமதிப்பீட்டு குழு வழங்கும் ஏ.பிளஸ் எனும் உயர்அங்கீகாரமும் ஜி.டி.என்.கல்லுாரிபெற்றது. இதற்கான புதிய கட்டட விழாவில் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் புதிதாககட்டப்பட்ட இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணிதவியல் ஆய்வு கூடங்களை திறந்து வைத்தார். முதல்வர்பாலகுருசாமி வரவேற்றார், தாளாளர் ரெத்தினம், இயக்குனர் துரைரெத்தினம் வாழ்த்தினர். டி.பி.டி.,கல்லுாரிகள் திட்டவழிகாட்டிகளான கோவை ஆர்.வி.எஸ்.கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர் சிவக்குமார் இணை பேராசிரியர்
தனபால் முன்னிலை வகித்தனர். டி.பி.டி திட்டத்தில் பெறப்பட்ட மத்திய அரசு நிதி பயன்பாடு முறையை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி விளக்கினார். நான்கு துறை தலைவர்களான பேராசிரியர்கள் ராமச்சந்திரன்,ஜெயராமன், கவுசல்யா, ரேணுகாதேவி பேசினர். ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். .ஒருங்கிணைப்பாளர் தரணிதரன் நன்றி கூறினார்.

