/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' யில் ரோட்டில் நடமாடும் காட்டுமாடு
/
'கொடை' யில் ரோட்டில் நடமாடும் காட்டுமாடு
ADDED : மார் 13, 2024 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கொடைக்கானல் செவன் ரோட்டில் உலாவிய காட்டுமாடல் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
நேற்று மாலை 6:00 மணிக்கு இரு காட்டு மாடுகள் செவன் ரோட்டில் போக்குவரத்து மிகுந்த ரோட்டில் நடமாடின. வாகன ஓட்டிகள் அச்சமடைந்த நிலையில் ரோட்டில் சென்ற காட்டுமாடு ஏரி சாலை வரை சென்றது. இதை பஸ், டூவீலரில் சென்றவர்கள் புகைப்படம் எடுத்தனர். சில மாதங்களுக்கு முன் காட்டுமாடு ரோட்டில் நடமாடிய வரை முட்டியதில் ஒருவர் காயமடைந்தார். சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் நடமாடும் மெயின் ரோட்டோரங்களில் சர்வ சாதணரமாக நடமாடும் காட்டுமாடுகளால் அச்சம் ஏற்பட்டுள்ளது. வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

