/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விபத்துக்காக காத்திருக்கும் குடி நீர் மேல்நிலை தொட்டி
/
விபத்துக்காக காத்திருக்கும் குடி நீர் மேல்நிலை தொட்டி
விபத்துக்காக காத்திருக்கும் குடி நீர் மேல்நிலை தொட்டி
விபத்துக்காக காத்திருக்கும் குடி நீர் மேல்நிலை தொட்டி
ADDED : செப் 27, 2024 07:13 AM

பாளையம் பேரூராட்சி காச்சக்காரன் பட்டி மெயின் ரோடு அருகே சுற்றுப்பகுதி மக்களுக்காக 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி தற்போது சேதமடைந்துள்ளது.
தொட்டியின் துாண்களில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து கம்பி மட்டுமே வெளியே தெரிகிறது. ரோட்டோரம் உள்ள இத்தொட்டி எந்நேரமும் விழுமோ என்ற அச்சத்தில் இப்பகுதி மக்கள் உள்ளனர். விபரீதம் ஏற்படும் முன்பு தொட்டியை புதியதாக அமைக்க வேண்டும்.
...........புதிய தொட்டி கட்டப்படும்
மேல்நிலைத் தொட்டியை இடித்து விட்டு புதிதாகக் கட்ட அவுமதிக்காக அனுப்பி உள்ளோம். அனுமதி கிடைத்ததும் விரைவில் புதிய தொட்டி கட்டப்படும் .
பழனிச்சாமி , பேரூராட்சி தலைவர்,பாளையம் .