/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விபத்துக்காக காத்திருக்கும் பட்டுப்போன மரம்
/
விபத்துக்காக காத்திருக்கும் பட்டுப்போன மரம்
ADDED : பிப் 14, 2024 04:42 AM

வாகனங்களால் நெரிசல்
கோபால்பட்டி வேம்பார்பட்டி பிரதான சாலையில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் நிறுத்துவதால் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு உருவாகிறது. இந்த சாலை ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. பெரியசாமி, கோபால்பட்டி.
..............------பட்டுப்போன மரத்தால் விபத்து
திண்டுக்கல் அருகே எம்.எம். கோவிலுார் ரோட்டில் பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம் உள்ளது .போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் பட்டுப்போன மரம் உள்ளதால் காற்று அடிக்கும் போது விபத்து அபாயம் உள்ளது. மரத்தை அகற்ற வேண்டும்.சண்முகம், எம்.எம். கோவிலுார்.
...............-------குப்பையை கொட்டி தீ வைப்பு
குப்பையை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு
ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் ரோட்டில் லெக்கையன் கோட்டை பைபாஸ் ரோடு தொடங்கும் இடத்தில் குப்பையை கொட்டி தீ வைத்து எரிப்பதால் உருவாகும் புகை ரோட்டை மறைப்பதுடன் சுற்றுச்சூழலுக்கும் தீங்கை விளைவிக்கிறது. .காமாட்சி ஒட்டன்சத்திரம்.
..................--------துார்வாரியும் நோ யூஸ்
பழநி வெள்ளைய நாடார் சந்தில் சாக்கடை முறையாக துார் வராமல் ஆங்காங்கே அடைத்துள்ளது .துார்வாரிய மண்ணும் அகற்றப்படாததால் மீண்டும் சாக்கடையை முடுகிறது .முறையாக சாக்கடை மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் ஹரிஷ், பழநி.
..........---------மணல் திருட்டால் பள்ளம்
திண்டுக்கல் அருகே பெரிய கோட்டை கிராமம் கோம்பையான்பட்டி சந்தான வர்த்தினி ஆற்றின் கரையில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுகிறது.இதனால் பெரிய பள்ளங்கள் ஏற்படுகிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மண் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லிங்கம், கஸ்தூரிநாயக்கம்பட்டி.
............-------ரோட்டில் ஆக்கிரமிப்பு
ஆயக்குடி ஓபுளாபுரம் மேற்கு தெருவில் கற்களை வைத்து ரோட்டை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது .அதிக வாகனம் செல்லும் பகுதி என்பதால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.தாமோதரன், ஓபுளாபுரம்.
........................-------
அகற்றப்படாத குப்பை
திண்டுக்கல் அறிவு திருக்கோயில் ரோடு அருகே குப்பை அள்ளப்படாமல் குவிந்துள்ளது .இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது .துர்நாற்றம் வீசுவதால் முள் செடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது . மக்களும் பாதிக்கப்படுகின்றனர் குப்பை, செடிகளை அகற்ற வேண்டும்.குமரன், செட்டிநாயக்கன்பட்டி.
...............------

