ADDED : பிப் 19, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்l:: பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பினை ஊக்கப்படுத்தும் விதமாக சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன்வளர்ப்பு செய்தல், புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்தல், நடுத்தர அளவிலான அலங்கார மீன் வளர்த்தெடுத்தல், புறக்கடை, கொல்லைப்புற அலங்கார மீன் வளர்ப்பு போன்ற திட்டங்களுக்கு பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமும், ஆதிதிராவிடர், பெண்களுக்கு 60 சதவீதம் மானியமும் வழங்கப்படும்.
விரும்புவோர் மீன்வளம், மீனவர் நல உதவி இயக்குநர் அலுவலகம், நேருஜி நகர், திண்டுக்கல் அலுவலகம் 97516-64565 என்ற எண்ணில் அணுகலாம்.

