/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குட்கா விற்ற 8 கடைகளுக்கு சீல்
/
குட்கா விற்ற 8 கடைகளுக்கு சீல்
ADDED : நவ 27, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர், புறநகர், ஆத்துார், ரெட்டியார்சத்திரம், நத்தம், சாணார்பட்டி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் சில்லரை வணிகக் கடைகள், மளிகை கடைகளில் குட்கா, பான் மசாலா விற்பனை தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் செல்வம், ஜாபர் சாதிக், முருகன், ஜோதிமணி, வசந்தன், ராமசாமி சோதனை நடத்தினர்.
8 கடைகளில் இருந்து கணேஷ், கூல் லிப் உள்ளிட்ட 12 கிலோ குட்கா, பான் மசாலாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிமையாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதத்தோடு கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

