/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உலக சாதனை புரிந்த 6 வயது மாணவர்
/
உலக சாதனை புரிந்த 6 வயது மாணவர்
ADDED : ஜன 15, 2026 06:38 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்ம் ஞானப்பிரகாஷ் கல்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஓன்றாம் வகுப்பு மாணவர் ஜோ.சாணக்கிய 2 மணிநேரம் இடைவிடாமல் தொடர்ச்சியாக ஸ்கேட்டிங் செய்து கொண்டே ஒற்றைச் சிலம்பத்தை சுற்றியபடி உலக சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனை அர்ஜூனா உலக சாதனை அமைப்பின் நான்கு வல்லுனர்கள் முன்னிலையில் வேந்தன் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் ஜன.12 மாலை 5:20 மணி முதல் இரவு 7:20 மணி வரை நடந்தது. மாணவருக்கு பதக்கம், சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டது. டாக்டர் ஆசைத்தம்பி, பள்ளி தாளாளர் குமரேஸ், வேந்தன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இயக்குனர் ரேணுகாதேவி, டாக்டர் கவின், இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹெரால்ட் ஜாக்சன் மாணவரை பாராட்டினர்.

