ADDED : மே 09, 2025 02:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் முருகன், 54. பள்ளி தலைமையாசிரியர்.
பள்ளி மாணவியருக்கு பாலியல் தொந்தரவு தந்து மிரட்டியதாக எழுந்த புகாரில் ஒட்டன்சத்திரம் மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் முருகனை கைது செய்தனர். விசாரணையில், முருகனுக்கு 30 ஆண்டுகள் சிறை, 2.02 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

