/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வழிப்பறி செய்த 3 வாலிபர்களுக்கு சிறை
/
வழிப்பறி செய்த 3 வாலிபர்களுக்கு சிறை
ADDED : அக் 23, 2024 07:15 PM

திண்டுக்கல்;திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரோட்டோரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்களை தாக்கி மிரட்டி பணம்,அலைபேசி பறித்த 3
வாலிபர்களுக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நத்தம் குமரப்பட்டிபுதுாரை சேர்ந்தவர்கள் அழகேசன்30,அவரது நண்பர்கள் யோகேஸ்வரன்28,வினோத்30. இவர்கள் 2023 மே.15ல் நத்தம் டூ
துவரங்குறிச்சி குமரப்பட்டி பகுதியிலிருக்கும் பாலத்தில் இரவு நேரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்த ஹரிதர்சன்26,மதுரை பழங்காநத்தம் ஆகாஷ்20,நத்தம் பரளிபுதுார் அபிமன்யூ22 ஆகியோர்
சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி அழகேசன்,யோகேஸ்வரன்,வினோத் ஆகியோரை தாக்கி அவர்களிடமிருந்த ரூ.2000,அலைபேசிகளை பறித்து வழிப்பறியில் ஈடுபட்டனர். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி,இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்து சிறையில்அடைத்தனர்.
இதன்வழக்கு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. குற்றவாளிகள் ஹரிதர்சன்,ஆகாஷ்,அபிமன்யு ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.5 ஆயிரம் விதித்து நீதித்துறை நடுவர் கனகராஜ்
தீர்ப்பளித்தார். அரசு தரப்பு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக குமரேசன் ஆஜரானார்.

