/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாலையூர் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
/
சாலையூர் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 16, 2024 06:49 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடி சாலையூர் ஸ்ரீசித்தி விநாயகர் கோயிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
சாலையூர் ஸ்ரீசித்தி விநாயகர், ஸ்ரீகாளியம்மன், மந்தை முனியப்பன் கோயில் கும்பாபிஷேகம் விழா ஏப்.13 காலை 10:30 மணிக்கு மகாகணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள் வளர்க்க, அர்ச்சகர்கள் வேதம் முழங்க கலசத்தில் பரிவார தெய்வங்களை எழுந்தருள செய்யும் வேதிகா பூஜை நடந்தது.
இரவு 7:30 மணிக்கு முதற்கால யாக வேள்வி துவங்கி சன்னவதி, கனிவர்க்கத்தினால் ஹோமம் வளர்த்தனர்.
ஏப்.14 காலை 7:00 மணிக்கு விநாயகர், வருண பகவான் யாக வழிபாட்டுடன், ஸ்ரீகாளியம்மன் வேதபாராயணம் நடந்தது.
காலை 9:00 மணிக்கு புனித நீர் குடயாத்திரையுடன் கலச விமானத்தில் சிவாச்சாரியார் பிரசன்ன வெங்கடேஷ் குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. வானத்தில் கருடன் தோன்ற பக்தர்கள் தரிசித்தனர்.
இதன்பின் சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்ய சிறப்பு வழிபாடு, தீபாரதனை நடந்தது. பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
அன்னதானம் நடந்தது. இதை தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு வள்ளி திருமணம் புராண நாடகம் நடந்தது.

