/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடகனாறு வல்லுனர் குழு அறிக்கை வெளியிட ஊர்வலம்
/
குடகனாறு வல்லுனர் குழு அறிக்கை வெளியிட ஊர்வலம்
ADDED : ஏப் 04, 2024 04:05 AM
வேடசந்துார், : குடகனாறு வல்லுனர் குழு அறிக்கையை வெளியிடாத தமிழக அரசை கண்டித்து, குடகனாறு பாதுகாப்பு சங்கத்தினர் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்துள்ள நிலையில், நேற்று காலை வேடசந்துார் தாசில்தாரிடம் வாக்காளர் அட்டையை ஒப்படைப்பதாக கூறி ஊர்வலமாக சென்றனர்.
குடகு மலையில் உருவாகும் குடகனாறு, ஆத்துார், திண்டுக்கல், தாடிக்கொம்பு, வேடசந்துார் வழியாக சென்று நாகம்பள்ளி அருகே அமராவதி ஆற்றில் கலக்கிறது. ஆத்துாரில் அணை கட்டப்பட்டபோது நீரின் வழித்தடத்தை மாற்றி அமைத்ததால் தாடிக்கொம்பு, வேடசந்துார் பகுதிக்கு வரும் நீரின் அளவு குறைந்து போனதால் விவசாயிகள் போராடி வந்தனர்.
இதை தொடர்ந்து தமிழக அரசு வல்லுனர் குழு ஒன்றை அமைத்தது. இக்குழு அறிக்கையை சமர்ப்பித்தும் அரசு வெளியிடவில்லை.
இந்நிலையில் குடகனாறு பாதுகாப்பு சங்கம் சார்பில் வல்லுனர் குழு அறிக்கையை வெளியிடக்கோரி லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது.
இதை தொடர்ந்து நேற்று வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் நோக்கில் வேடசந்துார் தாலுகா அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு தாசில்தார்கள் சரவணகுமார், தமிழ்செல்வி, அழகாபுரி அணை உதவி பொறியாளர் மகேஸ்வரன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அரசுக்கு கடிதம் அனுப்புகிறோம் என கூற திரும்பினர்.

