/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கு ஊர்வலம்
/
சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கு ஊர்வலம்
ADDED : ஏப் 29, 2024 06:15 AM

சின்னாளபட்டி: சித்திரை திருவிழாவை முன்னிட்டு சின்னாளபட்டி ராமஅழகர், சுந்தரராஜ பெருமாள் கோயில்களில், சுவாமி கள்ளழகராக பூப்பல்லக்கில் ஊர்வலம் நடந்தது.
சின்னாளபட்டியில் மேட்டுப்பட்டி சுந்தரராஜ பெருமாள், ராம அழகர் கோயில்களில் சித்திரைத் திருவிழா நடக்கிறது. கொடியேற்றத்துடன் துவங்கி தினமும் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், ஏப். 21ல் நடந்தது.
மேட்டுப்பட்டி சுந்தரராஜ பெருமாள் குடகனாற்றில் இறங்குதல் ஏப். 23ல் நடந்தது.
ராம அழகர் கோயில் திருவிழாவில் திருக்கல்யாணம், வெள்ளியங்கிரி சஞ்சீவி நதியில் இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
மண்டகப்படிகளில் எழுந்தருளல், மோகினி அவதாரம் எடுத்தல்நடந்தது. நேற்று, பூ பல்லக்கு ஊர்வலம்,புட்டுத் திருவிழா நடந்தது. காமயசுவாமி கோயிலிலிருந்து, கள்ளழகர் அலங்காரத்துடன் பூப்பல்லக்கில் பிருந்தாவன தோப்பிற்கு ராம அழகர் புறப்பாடு நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பூக்கள், நாணயங்கள், மாதுளை, திராட்சை பழங்கள் ஆகியவற்றை சுவாமிக்கு, காணிக்கையாக சமர்ப்பித்தனர். மேட்டுப்பட்டியில் சுந்தர ராஜ பெருமாள், பூப்பல்லக்கு ஊர்வலம் நடந்தது.

