ADDED : மே 02, 2024 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி கிரி வீதி கான்கிரீட் ஆல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
ஆனால் கோயில் சார்பில் பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன. கிரி வீதியில் சில இடங்களில் கான்கிரீட் பெயர்ந்துள்ளது. குறிப்பிட்ட துாரத்தில் இடைவெளிகள் கான்கிரீட் ரோடு அமைக்கும் போது விடப்பட்டுள்ளது.
இதில் பேட்டரி கார்கள் இயக்கும்போது சிரமம் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த,இடைவெளிகள் உள்ள பகுதிகளில் சிறு கற்கள் உடன் தார் சேர்த்து பேட்ச் ஒர்க் பணி நடக்கிறது.

