/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுயதொழிலுக்கு உதவும் மதி சிறகுகள்
/
சுயதொழிலுக்கு உதவும் மதி சிறகுகள்
ADDED : ஆக 12, 2024 04:16 AM
திண்டுக்கல் : ஊரக தொழில் நிறுவனங்கள்,தொழில் முனைவோருக்கு பல்வேறு வணிக மேம்பாட்டு ஆதரவு வழங்கும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மதி சிறகுகள் தொழில் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இம்மையம் ஒருங்கிணைந்த சேவை மையமாக செயல்பட்டு தொழில் கருத்துருவாக்கம், தொழில் நடத்துவதற்கான சான்றிதழ்கள், திட்ட ,துறை சார்ந்த நிபுணர்களிடமிருந்து வழிகாட்டுதல் ஆதரவு, சந்தைப்படுத்துதல், பிராண்டிங் ஆதரவு போன்ற பல்வேறு வணிக மேம்பாட்டு ஆதரவு தருகிறது.
தொழில் நிறுவனங்கள், பொதுமக்களுக்கு இ--சேவை, ஜி.எஸ்.டி., சேவைகளை வழங்குகிறது.
தொழில் முனைவோராக வேண்டுமென்ற ஆர்வமுள்ளவர்கள் தற்போது தொழில் செய்து கொண்டிருப்பவர்கள், தொழில் தொடங்க திட்டமிடுபவர்கள் மிகக் குறைந்த செலவில் இந்த மையங்களிலிருந்து பல்வேறு சேவைகளைப் பெறலாம்.
மதி சிறகுகள் தொழில் மையம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், பூமாலை வணிக வளாகம், கோபாலசமுத்திரம், திண்டுக்கல் என்ற முகவரியிலோ, 93605-00680, 83008-39362 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

