/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எங்கும் போதைப்பொருள் விற்பனை பா.ம.க., போராட்ட எச்சரிக்கை
/
எங்கும் போதைப்பொருள் விற்பனை பா.ம.க., போராட்ட எச்சரிக்கை
எங்கும் போதைப்பொருள் விற்பனை பா.ம.க., போராட்ட எச்சரிக்கை
எங்கும் போதைப்பொருள் விற்பனை பா.ம.க., போராட்ட எச்சரிக்கை
ADDED : மே 23, 2024 04:00 AM
திண்டுக்கல்: ''தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர் கெட்டு எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை தாராளமாக நடப்பதாக'' பா.ம.க., பொருளாளர் திலகபாமா தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டு விட்டது.
எங்கு பார்த்தாலும் கஞ்சா, போதைப் பொருள் விற்பனை தாராளமாக நடக்கிறது. அனுமதி இல்லா மதுபான பார்கள் இயங்கி வருகின்றன.
மனமகிழ் மன்றம் பெயரில் சீட்டு விளையாட்டு கிளப் ஒவ்வொரு பகுதிகளிலும் பெருகிவிட்டது.
யாரிடம் புகார் அளித்தாலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பது கிடையாது.
மணலைக் கொள்ளையடித்து ஆறுகளையும், நீர் நிலைகளையும் முற்றிலும் அழித்து வருகின்றனர்.
தேர்தல் ஓட்டு எண்ணிக்கை பிறகு போதை பொருளை விற்பனை தடுக்கும் வகையிலும் சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்து வரும் தமிழக அரசை கண்டித்தும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் .
நிலக்கோட்டை அருகே நடந்த கொலையை வி.சி.க., சில அமைப்புகள் சாதிய மோதலாக உருவாக்க முயன்றனர்.
ஆனால் போலீசார் மிக சிறப்பாக செயல்பட்டு உண்மையான குற்றவாளிகளை கைது செய்து பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளது பாராட்டத்தக்கது என்றார்.

