/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பிளாஸ்டிக் பை உணவுகளால் கால்நடைகள் பலி; அதிகாரிகள் அலட்சியத்தால் தொடரும் பரிதாபம்

ADDED : ஏப் 04, 2024 04:42 AM

தமிழகத்தில் நெகிழி பயன்பாடு தடை செய்யப்பட்ட போதும் இன்னும் தாராள புழக்கத்தில் இருக்கின்றன.
மாவட்டத்தில் ஏராளமான மலை சார்ந்த பகுதிகள் உள்ளன. இன்றளவும் ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் ரோட்டோரம் மேய்ச்சலில் ஈடுபடுவதை மாவட்ட முழுவதும் காண முடிகிறது. இருந்தப் போதும் உணவு பயன்பாட்டிற்கான உணவகங்களில் தடை செய்த பிளாஸ்டிக் பேப்பர், கப், இலை, கேரி பேக், வாட்டர் கேன் உள்ளிட்டவை தாரளமாக பயன்படுத்தப்படுகிறது. கொடைக்கானல் மலைப்பகுதியில் 5 லிட்டருக்கு குறைவான குளிர்பானம், வாட்டர் கேன் பயன்பாடு நெகிழி உள்ளிட்டவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தப் போதும் உணவுகள் பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வருவது தடை செய்யாமல் மலைப் பகுதிக்கு தாரளமாக கொண்டு வரப்படுகிறது. எஞ்சிய உணவுகளை பொதுமக்கள் ,சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பையோடு ரோடு , வனத்தில் வீசுகின்றனர். கொடைக்கானலில் உள்ள குப்பை தொட்டிகள் நிறைந்து அதிலுள்ள பிளாஸ்டிக் சாக்கு, நெகிழிகளில் உள்ள உணவுகளை உண்ணும் கால்நடைகள் ஜீரண பிரச்னையால் பாதிக்க வன விலங்கு,வளர்ப்பு பிராணிகள் பலியாகின்றன. மாவட்டத்தில் குப்பையில் வீசப்படும் இது போன்ற உணவுகளால் நாள்தோறும் கால்நடைகள் பலியாவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.